மாநகராட்சி பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டிடங்கள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

Published Date: November 11, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சி பகுதிகளில் புதிய ரேஷன் கடை கட்டிடங்கள் மற்றும் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டி உள்ளிட்டவற்றை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 75வது வார்டு வி.வி. கிரி சாலையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், ஜே.ஆர். சாலையில் புதிய நியாய விலை கடை கட்டிடம், சொக்கநாதன் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டி, 54 வது வார்டு பவர் ஹவுஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காப்பீட்டு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் பகுதி செயலாளர் பி.கே. செந்தில், சுபா கண்ணன், முன்னாள் துணை மேயர் மிசாபாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் பாண்டிச் செல்வி, நூர்ஜகான் உள்ளிட்ட திரளான  தி.மு.க. வினர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Media: Dinakaran